Published : 18 Jan 2014 12:00 AM
Last Updated : 18 Jan 2014 12:00 AM

தலைமைச் செயலகம், எழிலகத்தில் ஆன்–லைன் சென்சார் மின் கருவிகள்: மின்சார சிக்கனத்துக்கு புதிய நடவடிக்கை

அனைத்து அரசு கட்டிடங்களிலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், முதற்கட்டமாக தமிழக அரசின் தலைமைச் செயலகத் திலும், எழிலகம் கட்டிடத்திலும் ஆன் லைன் சென்சார் கருவிகளுடன் கூடிய மின் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் மின்சார தட்டுப் பாட்டைப் போக்கும் வகையில், மின் சிக்கனத்தைக் கடைபிடிக்கவும், சூரிய மின் சக்தி உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க வும், தமிழக அரசு பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் நட வடிக்கைகளில், தமிழக மின் ஆய்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி முதற்கட்டமாக, தலைமைச் செயலகத்தில் நவீன மின் சிக்கனக் கருவிகளை பொருத்த திட்ட மிடப்பட்டுள்ளது. 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை மற்றும் எழிலகக் கட்டிடத்திலுள்ள அனைத்து தளங்களிலும், டி 5 ப்ளோரசண்ட் மற்றும் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்படும். மேலும், அனைத்து தளங்களி லும் மின் கசிவு ஏற்படாத வகையில் நவீன ஒயரிங் செய்யப்படும். மின்சாரம் அதிகம் செலவிடாத, அதிக திறன் கொண்ட நவீன மின் மோட்டார்களும் பயன்படுத்தப்படும்.

இதுமட்டுமின்றி, அனைத்து தளங்களிலும் உள்ள மின் கருவி களை கண்காணிக்கும் வகையில் சென்சார் கருவிகளும் பொருத்தப்பட உள்ளன. இந்தக் கருவிகள் ஆன் லைனில் இணைக்கப்பட்டு, அனைத்து மின் கருவிகளின் செயல் பாடுகளை ஒருங்கிணைந்த மின் சிக்கன கட்டுப்பாட்டு அறைக்கு பதிவுகளை அனுப்பும்.

இதுகுறித்து, தமிழக மின் ஆய்வுத் துறை தலைமை ஆய்வாளர் எஸ்.அப்பாவு ’தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

நவீன கருவிகளின் செயல்பாடு கள் மற்றும் சென்சார் கருவிகளின் கண்காணிப்புகள் மூலம் சுமார் 40 சதவீதம்வரை, மின்சாரம் வீணாகாமலும், உபரியாகாமலும் சேமிக்க முடியும். சென்சார் கருவி களின் கண்காணிப்பைப் பயன் படுத்தி, ஆளில்லாத அறைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார கருவிகளைக் கட்டுப்படுத்துதல், பழுதான மின் கருவிகளின் செயல் பாடுகளைத் தடுத்தல் மற்றும் மின் கருவிகளின் சரியான செயல்பாடு களை அறிவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் இதுபோன்று மின் சிக்கனத் திட்டத்தை அமல் படுத்தினால், பீக் அவர்ஸ் நேரத்தில், 250 மெகாவாட்டுக்கு மேல் மின் தேவையை குறைக்க முடியும்.

இவ்வாறு அப்பாவு கூறினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் மின்சார சிக்கனத்தை, ஒவ்வொரு துறைகளிலும் எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்த, வழிகாட்டு நெறி முறைகள் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x