

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 88-க்கு விற்கப்பட்டது.
சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்களால் உள்ளூரில் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.23 ஆயிரத்து 88-க்கு விற்கப்பட்டது.
22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 886-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 870-க்கு விற்கப்பட்டது. இதற்கு முன்பு கடந்த 16-ம் தேதியில் ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 352-க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.