Published : 25 Jul 2016 10:02 AM
Last Updated : 25 Jul 2016 10:02 AM

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஜி.டி.நாயுடு விருது: விண்ணப்பிக்க வேண்டுகோள்

ஈரோட்டில் புத்தகத் திருவிழா ஆக. 5-ம் தேதி தொடங்குகிறது. மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா வில் நடைபெறும் நிறைவு நாள் விழாவில் புதிய அறிவியல் கண்டு பிடிப்பாளர் ஒருவருக்கு ‘அறிவி யல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஈரோடு புத்தகத் திருவிழாவின் ஒரு அங்கமாக புதிய அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு, ‘அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது’ வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க லாம். விருதுக்கானவரை தேர்வு செய்ய அறிவியல் அறிஞர்களின் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விருது பாராட்டுக் கேடயத்துடன் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையை யும் உள்ளடக்கியதாகும். விருதுத் தொகையை எம்.ஏ.முகமது முஸ்த பாவை நிறுவனராகக் கொண்ட ‘சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக் கட்டளை’ வழங்குகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்

விருதுக்கு விண்ணப்பிப்பவர் கள் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வு முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆய்வுக் கூடங்களிலோ அல்லது அங்கீக ரிக் கப்பட்ட வேறு ஆய்வுக் கூடங் களிலோ ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு இருக்க வேண்டும்.

ஆய்வின் சுருக்கத்தையும், பெயர் பெற்ற அறிவியல் இதழ் க ளில் வெளியான தனது 10 மிகச் சி றந்த கட்டுரைகளின் சுருக்கத்தை யும் பரிசீலனைக்கு ஆய்வாளர் அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் கண்டிபிடிப்புக்கு ஆய்வாளர் விரு துக்கு உரியவராக விளங்குகிறார் என்பதைச் சுருக்கமாகவும், தெளி வாகவும் தெரிவிக்க வேண்டும்.

இவ்விருது வழங்கும் விழா ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான ஆகஸ்ட் 16-ம் தேதியன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய விண் வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை இந்த விருதை வழங்க உள்ளார்.

ஆய்வுக் குறிப்புகளையும் தொடர்புள்ள அனைத்து அவ சியப்படும் ஆவணங்களையும், ‘மக்கள் சிந்தனைப் பேரவை, ஏ- 38, சம்பத் நகர், ஈரோடு 638 011’ என்ற முகவரிக்கோ, info@ makkalsinthanaiperavai.org என்ற இ-மெயில் முகவரிக்கோ ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.makkalsinthanaiperavai.org மற்றும் 0424 2269186, 88835 25553 என்ற எண்ணில் தெரிந்து கொள்ள லாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x