

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தீர்ப்பளித்தார். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கக் கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத் தில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித் ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்து 4 பேரும் கடந்த 17-ம் தேதி ஜாமீன் பெற்றனர்.
மேல் முறையீட்டு மனு
இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் ஜெயலலிதா உள் ளிட்ட 4 பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவை யில் உள்ளது. இந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.வி.சந்திரசேகரா முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.
அப்போது ஜெயலலிதா தரப்பில்,''சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் டிசம்பர் 18-ம் தேதி வரை அவகாசம் வழங்கி இருக்கிறது. நாங்கள் மேல்முறை யீட்டு மனுவை மூல வழக்குடன் இணைத்துக்கொள்ள இருக்கி றோம். எனவே மேல்முறையீட்டு மனுவை உரிய ஆவணங்கள் தயாரிக்கும் வரை ஒத்தி வைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.