சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் - மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவுரை

சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் - மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் அறிவுரை
Updated on
1 min read

உச்சி வெயிலில் வெளியில் செல் வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பொதுமக்க ளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டியுள்ளது. மேலும் இந்த ஆண்டு நாடு முழுவதும் இயல்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்வது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக் கத்தால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கீழ்க்கண்ட நடைமுறை களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினமும் அதிக அளவில் தண்ணீர் அருந்த வேண்டும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம். எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா மற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும்.

நேரடியாக உச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வும். தவிர்க்க இயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்க துணியை பயன்படுத்தலாம். அதிக நேரம் வெயிலில் இருப் பதைத் தவிர்க்கவும். கடுமை யான வெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறு வதால் உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும்.

வெயிலில் செல்லும்போது தலைசுற்றல் மயக்கம் ஏற்பட் டால் உடனடியாக நிழலில் ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும். அதன் பின் னரும் உடல்நலக்குறைவு ஏற்பட் டால் அருகில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனையை அணுகவும்.

அடிக்கடி நல்ல தண்ணீரால் முகத்தை கழுவுதல் நல்லது. மேலும், ஒரு நாளைக்கு 2 முறை குளித்தல் நல்லது. கோடைக் காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல் உகந்தது. இறுக்கமாக ஆடை அணிவதை தவிர்க்கவும். குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்க்கவும்.

சின்னம்மை, தட்டம்மை நோய் களுக்கான அறிகுறி தெரிந்தால், அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனையை அணுகவும். அம்மை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயி லிருந்து விடுபடும் வரையில் தனி மையில் இருக்க வைக்கவும்.

சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட் களை உண்ண வேண்டாம். வெளி யில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in