

ஆர்.கே.நகரில் போலீஸார் உதவி யுடன் அதிமுக அம்மா கட்சி யினர் பண விநியோகம் செய்வ தாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் தேர்தல் ஆணை யத்தில் நேற்று புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக பேரவையின் உயர்நிலைக் குழு உறுப்பினர் கே.பாண்டுரங்கன், நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக அம்மா கட்சியினர் வெளியில் இருந்து ஆட்களை கூட்டி வந்து வீடு, மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர். ஆர்.கே.நகரில் வீடு வீடாக வாக்கு சேகரிப்பது போல் சென்று வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து வருகின்றனர். வாக்காளர்கள் தொகுதிக்கு வெளியே தங்கியுள்ள குறிப்பிட்ட நபரிடம் டோக்கனை கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். இது போலீஸார் உதவியுடன் நடக் கிறது.
மேலும் அதிமுக அம்மா கட்சி யினர் எங்கள் பேரவை நிர்வாகி களை மிரட்டுகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தின் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினரும் திமுகவினரும்கூட வாக்காளர் களுக்கு பணம் விநியோகித்து வருகின்றனர். எனவே, பண விநி யோகத்தை தடுக்க தேர்தல் பணியில் முற்றிலும் துணை ராணுவத்தினரை ஈடுபடுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.