

தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே இருந்த மின் கம்பத்தில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தீவுத்திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் ஒரே இடத்தில் திறக்கப் பட்டு விற்பனை நடந்துவருகிறது. நேற்று பிற்பகல் 3 மணியளவில் பட்டாசு கடைகள் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள ஒரு மின் கம்பத் தில் இணைக்கப்பட்டிருந்த வயரில் கோளாறு ஏற்பட, பட்டாசு வெடித்தது போன்ற சத்தத்துடன் தீ பிடித்தது. இதை பார்த்ததும் அங்கிருந்த பட்டாசு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து அருகிலேயே இருந்த தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பட்டாசு விற்பனை நடைபெறு வதால் அங்கு 6 தீயணைப்பு வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் கிடைத்ததும் 6 வாகனங் களும், அதிலிருந்த வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேகமாக செயல்பட்ட வீரர்கள் மின்சார இணைப்பை முதலில் துண்டித்தனர். அதைத் தொடர்ந்து தீ எரிவதும் நின்றுவிட்டது. இந்த சம்பவத்தால் தீவுத்திடல் மைதானம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.