

உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(21). இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறி யியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர். இவர், பழநியைச் சேர்ந்த சின்னராஜின் மகளை காதலித்து 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகலில் இருவரும் உடுமலைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகையை அறிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பொதுஇடத்தில் சரமாரியாக வெட்டியது.
இதில் மாணவருக்கு கழுத்து, கைகளில் பலத்த வெட்டு விழுந்தது. அவரை காப்பாற்ற சென்ற பெண்ணுக்கும் தலையில் வெட்டு விழுந்தது. மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்கு எடுத்து செல்லும் வழியில் சங்கர் இறந்தார்.
இந்தச் சம்பவம் குறுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.