சென்னையில் ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் 1000 பேர் சேர்ந்தனர்
சென்னையில் ஆம் ஆத்மி கட்சியில் ஒரே நாளில் ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.லெனின் கூறியதாவது:
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உறுப்பினர்களைச் சேர்க்க பல்வேறு சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையில் வடபழனி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக் கிழமை நடந்த முகாம்களில் 1000 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பிரிவுக்கு தலைமை அலுவலகத்தை திறந்துள்ளோம். உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் செயல்பாடுகள் இங்கு நடக்கும். படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் கிளை அலுவலகங்களை திறக்க வுள்ளோம் என்றார்.
