

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளை மீட்க சொத்து மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் மீது அளவற்ற பற்றும் மதிப்பும் வைத்திருக்கும் பெருந்தகையாளர்கள், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு இடங் களில் நன்கொடையாக சொத்து களை எழுதி வைத்துள்ளனர். அதுபோல காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சிக்காக ஆங்காங்கே சில இடங்களில் உள்ளூர் காங்கிரஸ் அறக்கட்டளையின் பேரில் சொத்துகளை விலைக்கு வாங்கி உள்ளனர்.
தவறான நிர்வாகம் காரணமாக பல இடங்களில் இந்த சொத்து களை ஆக்கிரமித்து சிலர் அனுபவித்து வருகின்றனர். சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சொத்துகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.
இத்தகைய சொத்துகளை மீட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் பராமரிப் பில் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுப்பதற் காக சொத்து மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வினரோடு மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் நிர்வாகி கள் ஒத்துழைப்பும் ஆதரவும் தர வேண்டும்.
இக்குழுவின் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி, இணைத் தலைவராக மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, துணைத் தலை வராக மா.முத்துசாமி, அமைப் பாளராக முன்னாள் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குழுவின் உறுப்பினர் களாக முன்னாள் எம்.பி. எஸ்.ராம சுப்பு, முன்னாள் எம்எல்ஏக்கள் விஷ்ணுபிரசாத், ஆர்.எம்.பழனி சாமி, இராம.சுப்புராம், சந்திர சேகரன் மற்றும் கே.தணிகாசலம், ஆர்.தாமோதரன், எஸ்.எம்.இதய துல்லா, என்.அருள்பெத்தையா, திருச்சி வேலுச்சாமி, வழக் கறிஞர் சிவராஜசேகரன், டி.எஸ்.ராஜேந்திரன், கடலூர் சந்திரசேகரன், கே.ரங்கபூபதி, இ.வி.பி.பெருமாள்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.