

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்.
124 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, நேற்று முன்தினம் முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார். இதற்கான ஏற்பாடுகளை பேரவைத் தலைவர் தனபால், செயலாளர் ஜமாலுதீன் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல் வம் ஆதரவு எம்எல்ஏக்கள் கே.பாண் டியராஜன், எஸ்.செம்மலை, கே.மாணிக்கம், எஸ்.பி.சண்முக நாதன் மற்றும் முன்னாள் அமைச் சர் சி.பொன்னையன் ஆகியோர் நேற்று பகல் 12.30 மணி அளவில் தலைமைச் செயலகம் வந்தனர். அவர்கள் பேரவைத் தலைவர் தனபாலை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர்.
இதுதொடர்பாக பத்திரிகை யாளர்கள் கேட்டதற்கு, ‘‘நாங்கள் அனைவரும் பேரவைக்கு வந்து பங்கேற்போம்’’ என்று மட்டும் கே.பாண்டியராஜன் கூறினார். அவர்கள் வேறு எதுவும் கூற மறுத்து விட்டனர். அவர்கள் பேரவைத் தலை வர் தனபாலை சந்தித்து, ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எம்எல்ஏக்களுக்கு அழைப்பு
அதிமுகவில் சசிகலா தலை மையை எதிர்த்துள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு, கே.பாண்டிய ராஜன், செம்மலை, ஆறுகுட்டி, மனோரஞ்சிதம், ஆர்.நடராஜ் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்துள்ளனர். இவர்களில் ஓ.பன் னீர்செல்வம், கே.பாண்டிய ராஜன் ஆகிய இருவரை மட் டுமே பொதுச் செயலாளர் சசிகலா கட்சியை விட்டு நீக்கியுள்ளார். மற்ற எம்எல்ஏக்கள் இதுவரை நீக்கப்படவில்லை.
தற்போது பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கவேண்டிய நிலையில், அனைத்து எம்எல்ஏக் களுக்கும் அதிமுக கொறடா ராஜேந்திரன் அழைப்பு விடுத் துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக் களுக்கும் இந்த அழைப்புக் கடிதம் சென்றுள்ளது. இதுபற்றி கொறடா ராஜேந்திரன் தரப்பில் கேட்டபோது, ‘‘கட்சியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் கிடைக்காததால், அவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.