

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் வல்லூர் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று 3- வது அலகில் உள்ள தண்ணீரை குளிரூட்டும் ஜெனரேட்டர் பகுதி, திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து, வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து, 5 தீயணைப்பு வாகனங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-ம் அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்போது வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. தீ விபத்தில் நாசமான கருவி களை சரி செய்ய 20 நாட்களுக்கு மேலாகும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், முன் எச் சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள 2- வது அலகு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இன்றோ நாளையோ உற்பத்தி தொடங்கும் என தெரிகிறது.