

தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செய லாளர் வி.ராமச்சந்திரன் ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். தமிழக மின்வாரியத் தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மின்வாரியம் சார்பில் குறைந்த பட்சம் ரூ.312 ஊதியம் வழங்கப் பட்டாலும், ஒப்பந்ததாரர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.150 மட்டுமே வழங்குகின்றனர். எனவே, ஒப்பந்தத் தொழிலாளர் களாக பணியாற்றும் 7,000 பேரை பணி நிரந்தப்படுத்த வேண்டும்.
உதய் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளதால் மின் நுகர்வோர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படும். இத்திட்டத்தால் 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் காலியாக உள்ள 40,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.