பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் ஏழை மாணவி: உதவி செய்ய அரசுக்கு வேண்டுகோள்

பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் ஏழை மாணவி: உதவி செய்ய அரசுக்கு வேண்டுகோள்

Published on

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீராட்சிமங்கலம் கிராமம். இங்கு உள்ள காம ராஜர் தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் பேருந்து நடத்துநர். இவரது மனைவி ராதா. மகள் ஐஸ்வர் யா.கடந்த பிளஸ் 2 தேர்வில் இவர் 1,108 மதிப்பெண் பெற்றார். தொடர்ந்து, மருத்துவப் படிப்பு கலந்தாய்வில், சென்னை மருத்து வக் கல்லூரியில் பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

இந்நிலையில், விடுதி மற்றும் புத்தகக் கட்டணத்துக்கு வழியின்றி அவரது குடும்பம் சிரமப்படுவதாக, ‘தி இந்து உங்கள் குரல்’ பதிவில் மாணவியின் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆர்.நடராஜ் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஐஸ்வர்யாவை வீராட்சிமங்கலத்தில் சந்தித்துப் பேசியபோது, “எம்பிபிஎஸ் படிப் புக்கு, காத்திருப்போர் பட்டி யலில் 3-ம் இடம் கிடைத்தது. அதே சமயம், பல் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. அதற்கான கட்டணத் தையும் செலுத்திவிட்டேன்.

ஆனால், விடுதிக் கட்டணம் ரூ.65 ஆயிரம் செலுத்த வேண் டும். மேலும், புத்தகத்துக்கு ஆண் டுக்கு ரூ.30 ஆயிரம் வரை செல வாகும். தற்போதைய சூழ்நிலை யில், அந்த அளவுக்கு செலவு செய்ய குடும்பத்தில் வசதி இல்லை. ஆகஸ்ட் 2-வது வாரத் தில் கல்லூரிக்குச் செல்ல வேண் டும் என்றால், கட்டணம் செலுத்த வேண்டும். தமிழக அரசு அளித்த ஊக்கத்தால்தான் இந்த அளவுக்கு சிறப்பாக என்னால் படிக்க முடிந் தது. என் கல்லூரிப் படிப் புக்கும் கருணை உள்ளத்துடன் அரசு உதவ வேண்டும்” என்றார்.

மாணவி ஐஸ்வர்யாவின் தந்தை வேலுச்சாமியின் தொலைபேசி எண்: 9626344034

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in