உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் எஸ்.கே.கவுல்?

உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் எஸ்.கே.கவுல்?
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமன பரிசீலனையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பெயரும் இடம்பெற்றுள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள இப்ராஹிம் கலிபுஃல்லா வரும் ஜூலை 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஓய்வுபெற்றால், உச்ச நீதிமன்ற நீதிபதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரிக்கும்.

அந்த 3 இடங்களுக்கு நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர், கே.எம்.ஜோசப், எஸ்.கே.கவுல் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

இதில், நீதிபதி மஞ்சுளா செல் லூர் தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நீதிபதி ஜே.எம்.ஜோசப் உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கிறார். இவர் அண்மையில் உத்தராகண்ட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியவர்.

நீதிபதி எஸ்.கே.கவுல் தற் போது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். இந்த 3 நீதிபதிகளையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது குறித்து உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் குழு பரீசிலித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in