வடசென்னை தொகுதியில் வெற்றிக்கனி யாருக்கு?

வடசென்னை தொகுதியில் வெற்றிக்கனி யாருக்கு?
Updated on
1 min read

வடசென்னை தொகுதி பெரும்பா லும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடமே இருந்து வந்துள்ளது. இங்கு போட்டியிடும் 40 வேட்பாளர் களில் அதிமுக சார்பில் போட்டி யிடும் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, திமுக சார்பில் களம் காணும் ஆர்.கிரிராஜன், தேமுதிகவின் சவுந்திரபாண்டியன், காங்கிரசின் பிஜு சாக்கோ மற்றும் மார்க்சிஸ்ட் யு.வாசுகி குறிப்பிடத்தக்கவர்கள்.

எம்.ஜி.ஆர். காலத்திலேயே திமுகவின் கோட்டையாக விளங் கிய இப்பகுதியில், தற்போது பல சட்டமன்ற தொகுதிகள், அதிமுக வசம் உள்ளன. மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் திருவொற்றியூர் (அதிமுக), ராதாகிருஷ்ணன் நகர் (அதிமுக), திருவிக நகர் (அதிமுக), ராயபுரம் (அதிமுக) ஆகிய தொகுதிகள் அதிமுக வசமும், பெரம்பூரும் (மார்க்சிஸ்ட்), கொளத்தூரும் (திமுக) மாற்றுக்கட்சிகளிடம் உள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

திருவாற்றியூர், வண்ணை, ராயபுரம் போன்ற பகுதிகள் அதிமுகவுக்கு கைகொடுக்கும். ஆனால், கழிவுநீர், குடிநீர் மற்றும் மோசமான சாலைகள் போன்ற பிரச்சினைகளால் பெரம்பூர், வியாசர்பாடி, கொருக்குப்பேட்டை போன்ற இடங்களில் அதிமுக கவுன்சிலர்களை பிரச்சாரத்துக்கு மக்கள் அனுமதிக்காத நிலை உள்ளது.

அதேஅளவுக்கு திமுக மீதும் மக்களுக்கு கோபம் உள்ளது. வடசென்னை தொகுதி, திமுக வசமே நீண்ட காலமாக இருந்து வந்தாலும் தென்சென்னையைப் போல் அடிப்படை வசதிகள் செய்யப் படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மின்கட்டண உயர்வு போன்றவற்றை முன்னிறுத்தி திமுக வினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

காங்கிரஸின் ராயபுரம் மனோவுக்கு கொருக்குப்பேட்டை, ஆர்.கே.நகர் பகுதிகளில் செல்வாக்கு உள்ளது. முக்கிய கட்சி வேட்பாளர்களில் அதிமுகவைச் சேர்ந்த டி.ஜி.வெங்கடேஷ்பாபு சற்று பிரபலமானவர். எனினும், கொளத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகள் திமுக கோட்டையாக கருதப்படுகிறது.

தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் காணப் படுகிறது. ‘மோடி அலை’ எந்த அளவுக்கு கைகொடுக்குமோ தெரியவில்லை. எப்போதும்போல் இடதுசாரிகள் இறங்கி வேலை செய்தாலும் திமுக, அதிமுகவின் பிரச்சார பலத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட சில இடங்களில் செல்வாக்கு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு பரவலாக ஆதரவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. திமுகவின் களப்பணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருந்த நிலை மாறி, பிரச்சாரத்துக்கு முதல்வர் வந்து சென்ற பிறகு, அதிமுகவினர் உற்சாகத்துடன் பணி செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in