

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கொள்கையுடன், வன்முறை யில் ஈடுபடும் அமைப்புகளைத் தமிழகத்தில் தடை செய்யக் கோரி, ஆளுநரிடம் மனு அளிக்கப்போவ தாக தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.
அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
தமிழர் முன்னேற்றப் படை என்ற போர்வையில் ஒரு கூட்டம், சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைய முயன்று வன்முறையில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும், எண்ணூர் துறைமுகத்துக்கு, காமராஜர் பெயர் சூட்டும் நிகழ்ச்சியில் இருப்பதை அறிந்து, சத்தியமூர்த்தி பவனில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து, சதித்திட்டத்துடன் காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி வந்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த குறைந்த அளவிலான தொண்டர்களும் நிர்வாகிகளும் அவர்களின் வன்முறையை எதிர் கொண்டனர். அவர்கள் இல்லாமலிருந்தால், வன்முறையாளர்கள் காங்கிரஸ் அலுவலகத்திலிருந்தவர்களைக் கொலை செய்திருந்தால், நிலைமை விபரீதமாகியிருக்கும்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பலர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என எங்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரிக்க வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.