அழகர் கோயிலில் ஆடித் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அழகர் கோயிலில் ஆடித் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Updated on
1 min read

மதுரை அழகர் கோயிலில் நேற்று ஆடித் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏரா ளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் திருவிழா. கடந்த ஜூலை 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் நிறைவாக நேற்று காலை தேரோட்டம் தொடங்கியது.

காலை 5.45 மணிக்கு அலங் கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜப் பெருமாள் என்ற கள்ளழகர் காட்சியளித்தார். தொடர்ந்து மேளதாளம் முழங்க, தீவட்டி பரி வாரங்களுடன் கோயில் யானை சுந்தரவள்ளி திருத்தேரின் முன் அணிவகுத்தது. அங்கு இருந்த ஏராளமான பக்தர்கள் காலை 8.35 மணியளவில் கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பியபடி திருத்தேரின் வடங்களை பிடித்து தேரை இழுத்தனர்.

கோயில் தெற்கு கோட்டைவா சல், மேற்கு கோட்டை பகுதியில் உள்ள தேரோடும் சாலை வழியாக சுற்றி வந்த தேர், காலை 10.50 மணிக்கு நிலையை அடைந்தது. புதிய தேர் மற்றும் பாதை சரியாக இருந்ததால் எந்த சிரமமும் இன்றி 2 மணி 25 நிமிடங்களில் தேர் நிலைக்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேரோட்ட விழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாவட்டங் களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் மாட்டு வண்டிகளில் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பலர் சந்தனக்குடம் எடுத்து வந்து அழகர் கோயில் நுழைவு வாயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு சாத்துபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in