இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

இன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல்: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

இன்று நடைபெறும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ‘‘லோதா கமிட்டி அறிக்கையில் கிரிக்கெட் சங்கங்களின் முக்கிய பதவிக ளில் சமூகத்திலும், அரசியலிலும் மிகுந்த செல்வாக்கு உள்ளவர் களே இருப்பதாலும் அவர்கள் நீண்டகாலம் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவும் சட்டவிதிகளை மாற்றியுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.

இச்சூழலில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தல் ஜூன் 25-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில மாவட்ட சங்கங்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப் பட்டிருக்கிறது. மேலும் நீதிபதி லோதா குழு பரிந்துரைப்படி முன்னாள் வீரர்கள் யாரும் நிர்வாகத்தில் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக நான் பலமுறை மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன் வாதிடும்போது, “சங்கத்தின் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்யும் வகை யில் நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். வேறு தேதியில் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நீதிபதி லோதா குழு அளித்துள்ள பரிந் துரைகள் அடிப்படையில் இப்பிரச் சினை எழுப்பப்பட்டுள்ளது. அக் குழுவின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளன. இந்த நிலையில் இம்மனுவை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in