பள்ளிகள், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உட்பட பழுதான கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

பள்ளிகள், குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் உட்பட பழுதான கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை கொளத்தூர் தொகுதி யில் நேரில் ஆய்வு மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பழுதான பள்ளிக் கட்டிடங்கள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சீரமைக்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

திமுக பொருளாளரும், சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஜிகேஎம் காலனியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி, ராஜா தோட்டம், ஜமாலியா பகுதிகளில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு களை ஆய்வு செய்தவர், அப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜிகேஎம் காலனி அரசு மேல் நிலைப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆனால், அங்கு போதுமான அளவு குடிநீர் வசதி இல்லை. குடிநீர் தொட்டி சரியாக பராமரிக் கப்படவில்லை. மின்சாதனப் பொருட்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக நிர்வாகிகள் கூறினர். பாழடைந் துள்ள சத்துணவுக் கூடத்தை புதுப்பிக்குமாறும் கோரினர். பள்ளி மாணவர்களுக்கு சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கவும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். இப்பள்ளியில் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

ராஜா தோட்டம் பகுதியில் 44 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இங்கு 700 சதுர அடியில் சமுதாய நலக்கூடம் கட்டுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜமாலியா, கவுதமபுரம், ரமணா நகர் பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களையும் புதுப்பிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்துள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப் புகள் கட்ட வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத் துள்ளேன். முடிந்தவரை அந்தந்த துறைகளில் உள்ள நிதிகளைப் பயன்படுத்தி அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப் பட்டால் எம்எல்ஏ தொகுதி மேம் பாட்டு நிதியை ஒதுக்கித் தருவ தாக அதிகாரிகளிடம் தெரிவித் துள்ளேன். சென்னை முழுவதும் பல இடங்களில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் பழுதடைந் துள்ளன. இதை அந்தந்த தொகுதி யின் எம்.பி., எம்எல்ஏக்கள் கவனிக்க வேண்டும்.

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலை முடிவு செய்வதற்காக கூட்டப்பட்ட அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் திமுக உறுப்பினர்களை பேச அனுமதிக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் நடக்கவேண்டிய மானியக் கோரிக்கை விவாதங் களை ஒரே நாளில் நடத்தி முடிப்பது சரியல்ல. இதனால்தான் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in