

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், பெயர் பலகையை தாக்கி கடையை மூட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையோரம் பல்வேறு இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் நகரப்பகுதியில் காமாட்சியம்மன் கோயில் மற்றும் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அருகே, குடியிருப்புப் பகுதியில் செயல் பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி பாமக மாவட் டச் செயலாளர் மகேஷ் தலைமை யில் நேற்று கடை முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மேலும், அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி னர். பின்னர் டாஸ்மாக் கடையின் பெயர்ப் பலகை அக்கட்சியினர் சிலர் உடைக்க முயற்சித்தனர். மேலும், கடையில் மதுபாட்டில் வாங்க வந்த நபர்களையும் தாக்க முயன்றனர். பின்னர், கடையை மூட முயன்றனர். கடை ஊழி யர்கள் நடத்திய பேச்சு வார்த்தை யைத் தொடர்ந்து பாமகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.