

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி என்.ஆதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணி புரிந்தவர் என்.ஆதிநாதன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இந் நிலையில் பணியில் இருந்த போதே இவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நீதிபதி கள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது. தற்போது இவரை சென்னை உயர் நீதி மன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 39- ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனு மதிக்கப்பட்ட 75 நீதிபதி பணி யிடங்களில் தற்போது 36 பணி யிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.