Published : 27 Feb 2017 08:40 PM
Last Updated : 27 Feb 2017 08:40 PM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.22 ஆயிரத்து 808க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை திங்கட்கிழமை கணிசமாக குறைந்தது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்து இருந்தது. சென்னையில் திங்கட்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து ரூ.22 ஆயிரத்து 808க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 851க்கு விற்கப்பட்டது. இதுவே, ஞாயிற்றுக்கிழமை ரூ.2 ஆயிரத்து 863க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x