

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரின்போது தமிழர் கள் பலர் ராணுவத்திடம் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்தவர்களில் 104 பேர் மர்மமான முறையில் இறந்தனர். அவர்களை இலங்கை ராணுவத் தினர் கொலை செய்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச அள வில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். போராட்டத்துக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இலங்கை தூதரகத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக் காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு அருகே இருந்த மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.