

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது ‘நமக்கு நாமே’ என்ற பெய ரில் பிரச்சாரப் பயணம் மேற் கொண்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஆர்.கே.நகரிலும் அதே பாணியில் பிரச்சாரம் செய்து வரு கிறார். கடந்த 3-ம் தேதி மீனவர்கள், வணிகர்களையும், நேற்று முன் தினம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட ராய புரத்தில் ‘நாடு நலம்பெற’ என்ற தலைப்பில் பொதுமக்களுடன் ஸ்டாலின் நேற்று கலந்துரையாடி னார். ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 150-க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்றனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து ஸ்டாலின் பேசியதாவது:
முதல்வராக இருந்த ஜெய லலிதா 2 முறை வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தாலும் ஆர்.கே.நகர், தமிழகத்திலேயே பின்தங்கிய தொகுதியாக உள்ளது. குடிநீர், மருத்துவம் போன்ற அடிப் படை வசதிகள்கூட இங்கு இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய லலிதா சிக்கியதற்கு அவரது தோழி சசிகலாவே காரணம். சசிகலாவின் உறவினரான டிடிவி. தினகரன் ஆர்.கே.நகரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பண பலம், அதிகார பலத்தைப் பயன்படுத்தி வருகிறார். என்னதான் பணம் பட்டுவாடா செய்தாலும் வெற்றியை யாராலும் பறிக்க முடியாது.
அதிமுக ஆட்சியில் விவசாயி கள், வணிகர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி கடந்த 25 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களை மத்திய பாஜக அரசும் கண்டு கொள்ளவில்லை. தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை. போரா டும் விவசாயிகளை நேரில் சந்தித்து பிரச்சினைக்குத் தீர்வு காண முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.கே.நகரிலேயே பிறந்து வளர்ந்த எளிய தொண்டரான மருது கணேஷை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். கொளத்தூர் தொகுதியில் வாரந்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகி றேன். அதுபோல மருதுகணேஷு டன் இணைந்து ஆர்.கே.நகரிலும் மக்களைச் சந்திப்பேன். தமிழகம் இன்று தொழில் வளர்ச்சியிலும், விவசாய வளர்ச்சியிலும் பின்தங்கி யுள்ளது. தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல ஆட்சி மாற்றம் அவசியம். திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.