Published : 25 Sep 2016 10:22 AM
Last Updated : 25 Sep 2016 10:22 AM

சென்னை மாநகராட்சியில் புதிதாக 107 அம்மா உணவகங்கள்: அமைச்சர் வேலுமணி திறந்துவைத்தார்

சென்னை மாநகராட்சியில் புதிதாக மேலும் 107 அம்மா உணவகங்களை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று திறந்துவைத்தார்.

சென்னையில் ஏழை எளிய மக்கள் மற்றும் கூலித் தொழி லாளர்கள் பயனடையும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் 300 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மலிவு விலையில் பொங்கல், இட்லி, தயிர் சாதம், சாம்பார் சாதம், சப் பாத்தி போன்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அம்மா உணவகங்களின் எண் ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக, அந்தந்த வார்டு கவுன் சிலர்கள் மூலமாக பரிந்துரைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படை யில் மேலும் 107 அம்மா உணவகங் களைத் திறக்க நடவடிக்கை எடுக் கப்பட்டது. அதன்படி பல்வேறு வார்டுகளில் அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டன. இந்த அம்மா உணவகங்களை சில தினங் களுக்கு முன்பே முதல்வர் ஜெய லலிதா காணொலி காட்சி மூலமாக திறப்பதாக இருந்தது. அதற்காக, புதிய அம்மா உணவகங்களில் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந் தன. இந்நிலையில் நிர்வாக காரணங்களால் அன்று அவை திறக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து 107 அம்மா உணவகங்கள் திறப்பு விழா, தண்டையார்பேட்டை மண்டலம், 35-வது வார்டுக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள உணவகத் தில் நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று, உணவகத்தை திறந்துவைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை வழங்கினார். தொடர்ந்து, சமையல் அறையினுள் சென்று, உணவு சமைக்கப்படும் விதம், அதற்கு பயன்படுத்தப்படும் பாத் திரங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் முன் னிலையிலும், மயிலாப்பூர் தொகுதி யில் எம்எல்ஏ ஆர்.நடராஜ் முன்னிலையிலும், அம்பத்தூர் தொகுதியில் எம்எல்ஏ வி.அலெக் சாண்டர் முன்னிலையிலும், தியாக ராய நகர் தொகுதியில் எம்எல்ஏ பி.சத்யநாராயணன் முன்னிலை யிலும், பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏ வெற்றிவேல் முன்னிலை யிலும் அம்மா உணவகங்களை திறந்துவைத்தார்.

நேற்று மட்டும் திருவொற்றி யூர் மண்டலத்தில் 8, மணலி மண் டலத்தில் 2, மாதவரம் மண்டலத்தில் 6, தண்டையார்பேட்டை மண்டலத் தில் 8, ராயபுரம் மண்டலத்தில் 7, திரு.வி.க.நகர் மண்டலத்தில் 9,அம்பத்தூர் மண்டலத்தில் 6, அண்ணாநகர் மண்டலத்தில் 6, தேனாம்பேட்டை மண்டலத்தில் 4, கோடம்பாக்கம் மண்டலத்தில் 9, வளசரவாக்கம் மண்டலத்தில் 8, ஆலந்தூர் மண்டலத்தில் 9, அடை யாறு மண்டலத்தில் 10, பெருங்குடி மண்டலத்தில் 7, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 8 என மொத்தம் 107 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றின் திட்ட மதிப்பு ரூ.18 கோடியே 99 லட்சம் ஆகும். இதன் மூலம் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செயல்படும் அம்மா உணவகங்களின் எண் ணிக்கை 407 ஆக உயர்ந் துள்ளது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் பனீந்திர ரெட்டி, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி யில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x