

விழுப்புரம் அருகே பெரியபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்(23). இவர் கடந்த 4-ம் தேதி இரவு பலத்த தீக்காயங்களுடன் ஊருக்குள் ஓடி வந்து மயங்கி விழுந்தார். புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், 6-ம் தேதி இரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், பெரியபாபு சமுத்திரம் ஏரிக்கரையில் சதீஷை தீ வைத்து மர்ம நபர்கள் கொளுத்தியதாகவும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட் டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உட்பட 187 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் நூற்றுக்கும் மேற் பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பிரேதப் பரி சோதனை அறிக்கையின் அடிப் படையில் வழக்கை குற்றப் பிரி வுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப் படும் என எஸ்பி நரேந்திரன் நாயர் தெரிவித்தார். இதையடுத்து, “உடல் அடக்கம் செய்வதற்குள் பிரேதப் பரிசோதனை ஆய்வறிக் கையை பெற வேண்டும். சிறப்புப் புலனாய்வு அதிகாரியை நியமித்து அவர் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்” என விடுதலை சிறுத் தைகள் பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன் கூறினார்.
நேற்று ஞாயிற்றுகிழமை விடு முறை என்பதால் பிரேதப் பரி சோதனை செய்யப்படவில்லை. இன்று (ஜன.9) புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரி சோதனை செய்யப்படும் என்று காவல்துறை தரப்பில் சொல்லப் பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதை யடுத்து டிஎஸ்பி கோமதி விஜய குமார் தலைமையிலான போலீ ஸார் சதீஷின் வீடு, அவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப் படும் இடம் உள்ளிட்ட பகுதி களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.