

வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி பகீரதன் பள்ளியில் உலக திருக்குறள் பேரவையின் வேலூர் மாவட்ட 3-வது மாநாடு நேற்று நடந்தது.
உலக திருக்குறள் பேரவையின் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்டத் தலைவர் ரத்தினகிரி பால முருகனடிமை சுவாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிஞர் மா.ஜோதி வரவேற்றார்.
விழாவை முன்னிட்டு பகீரதன் பள்ளியில் திருவள்ளுவர் சிலை யை திறந்து வைத்து, திருக்குறள் ஒப்பித்தல், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாஜக மாநிலங் களவை உறுப்பினர் தருண் விஜய் பரிசுகள் வழங்கி பேசியதாவது:
தமிழ்நாட்டில் மாணவர்கள் இந்தி மொழியை கற்பதுபோல, வடமாநில மாணவர்கள் தமிழ் மொழியை கற்க வேண்டும். உலக மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். கங்கையில் உள்ள இந்துக்களின் புனிதத் தலமான ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.திருவள்ளுவர் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் இருந்து ஹரித்வார் வரை திருவள்ளுவர் திருப்பயணம் வரும் பொங்கல் தினத்தில் புறப்படு கிறது.
ஒவ்வொரு ஆண்டும் திருவள் ளுவர் பெயரில் விருது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.