சசிகலா விடுதலையாக வாய்ப்பு இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

சசிகலா விடுதலையாக வாய்ப்பு இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ கருத்து
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா விடுதலையாக வாய்ப்பு கள் இல்லை என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்தார்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க வந்த மார்க்கண்டேய கட்ஜூ விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சசிகலாவின் முழு ஆதரவைப் பெற்றுதான் பழனிசாமி முதல்வ ராக பொறுப்பேற்றுள்ளார். அத னால், சசிகலாவின் தலையீடு ஆட்சியில் இருக்கும். தமிழக முதல்வரின் செயல்பாடுகளை 6 மாதம் பார்க்க வேண்டும். அவர் சரியாக செயல்படவில்லை யெனில் அதன்பிறகு விமர்சனம் செய்யலாம்.

சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு மேலான நீதிமன்றம் நம் நாட்டில் வேறு இல்லை. அதனால் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால், சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சீராய்வு மனுக்கள் தள்ளுபடியே செய்யப்பட்டுள்ளன.

எனவே, தண்டனைக் காலத்தை சிறையில்தான் கழிக்க வேண்டியிருக்கும்.

பழனிசாமிக்குதான் அதிக எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இருப்பினும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்துக்கு குறைவான எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. அதைக்கொண்டு ஆட்சியமைக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்கள் ஆதரவு அதிகமாக இருந் தாலும், எம்எல்ஏ அல்லது எம்பி ஆதரவு அதிகமாக இருப்பவர்தான் முதல்வராகவோ அல்லது பிரதம ராகவோ வர முடியும்.

நாட்டில் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சினைகள் உள்ளன. வறுமையை ஒழிப்பது, வேலை வாய்ப்பை உருவாக்குவது, நல்ல கல்வியை அளிப்பது போன்ற வற்றை அரசு செய்ய வேண்டும். ராமர் கோயில் கட்டுவோம் என்பது மக்களிடம் இருந்து பிரச்சினைகளை திசை திருப்பும் முயற்சியாகும். ராமர் கோயிலை கட்டிவிட்டால் அது நாட்டில் நிலவும் வறுமை, வேலையின்மை உள்ளிட்டவைகளை ஒழித்து விடுமா என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in