

தென்காசி அருகே கணவர் திட்டியதால், 2 குழந்தைகளையும் தீ வைத்துக் கொன்றுவிட்டு, தீக்குளித்த பெண் உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட் டம் தென்காசி அருகில் உள்ள இலஞ்சி, பெரு மாள்கோயில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கி ரவி(30), சமையல் கலைஞர். இவ ரது மனைவி மகேஸ் வரி(27). இவர்களுக்கு சண் முகராஜா(9), தனுஸ்ரீ(4) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மகேஸ்வரி, கைப்பேசியில் யாருடனோ நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை இசக்கி ரவி கண்டித்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த மகேஸ்வரி, நேற்று காலை கணவர் வெளியே சென்றதும், வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் மீதும் தனது மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய 3 பேரும் சிறிது நேரத்தில் இறந்தனர்.
இதுகுறித்து குற்றாலம் போலீஸார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் இலஞ்சி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.