

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழ கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில், 13 ஆயிரத்து 175 சதுரடி யில், ரூ.2 கோடியில் கட்டப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இது தவிர, நாகை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோயில் அருகில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட பயணிகள் தங்கும் விடுதியையும் திறந்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னையில் திருவட்டீஸ் வரர் கோயி்ல், சதுரகிரி சுந்தரமகா லிங்க சுவாமி கோயில், திருவாரூர்- ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோயில் மற்றும் திருவாரூர், கடலூர், மாவட்டங்களில் என 6 கோயில்களில் அன்னதான கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கோவை, திருவள்ளூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் உள்ள 4 பிரதான கோயில்களில் வர வேற்பு மையங்கள், சேவார்த்தி கள் ஓய்வுக்கூடங்கள் கட்டப்பட்டுள் ளன. இது தவிர, அரியலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சேலம் மாவட்டங்களில் 5 கோயில்கள் மற்றும் பள்ளியில் கழிவறை மற்றும் குளியலறைகள், நெல்லை மாவட் டம், குற்றாலம் பராசக்தி மகளிர் கல் லூரியில் உள்விளையாட்டரங்கம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
மேலும், திருச்சி- ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், சேலம்- சுகவனேஸ்வரர் கோயில், மேச்சேரி பத்திரகாளியம்மன் கோயில்களில் பொருட்கள் வைப்பறை, தேர் பாதுகாப்பு கொட்டகை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டம் - கல்லங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோயில் பெண்கள் பள்ளியில் வகுப் பறைகள், ஆய்வுக்கூடம் மற்றும் அலுவலக கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இரண்டு துறைகளிலும் ரூ.12 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வெல்லமண்டி ந.நடராஜன், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.