

குடும்ப சண்டையால் பிரிந்து வாழ்ந்த மும்பை தம்பதியை சென்னை போலீஸார் சேர்த்து வைத்தனர்.
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 25-ம் தேதி ஆயிஷா(28) என்பவர் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “எனது கணவர் ரஹீப்(33), மும்பையில் வசிக்கிறார். எங்களுக்கு 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மூன்றரை வயதில் ஒரு மகன் இருக்கிறான். குடும்ப தகராறில் கடந்த 4 மாதத்துக்கு முன்பு சென்னைக்கு வந்து விட்டேன். நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். எனக்கும், எனது கணவருக்கும் இந்தி மொழியை தவிர வேறு எதுவும் தெரியாது. என்னை கணவருடன் சேர்த்து வைக்க உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வரதட் சணை தடுப்புப் பிரிவு கூடுதல் துணை ஆணையர் சி.ஷியாமளா தேவி விசாரணை நடத்தினார். மும்பையில் வசித்த ரஹீப்பிடம் பேசி அவரை சென்னை வர வழைத்தனர். பின்னர் இந்தி நன் றாக தெரிந்த 2 போலீஸ்காரர் களை வைத்து ஆயிஷா, ரஹீப் இருவருக்கும் தனித்தனியாக வும், சேர்த்து வைத்தும் கடந்த ஒரு வாரம் கவுன்சலிங் கொடுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இரு வரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு நன்றி தெரிவித்தனர்.