

வழக்கறிஞர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தினத்தை முன்னிட்டு, சென்னை அய்யப்பன்தாங்கலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மரக்கன்று கள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்ட பாமக இளைஞர் அணித் தலைவர் அன்பு மணி ராமதாஸ் எம்பி மரக்கன்று களை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் அன்பு மணி ராமதாஸ் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறது. தமிழ கத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. வழக்கறிஞர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அப்துல்கலாம் நினைவிடம் அமைக்க போதிய இடத்தை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்” என்றார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி விழுப்புரம் நகராட்சி உயர் நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.