

மழைநீர் நகருக்குள் புகுந்துவிடுவதால், செங்கல்பட்டு-மதுராந்தகம் ரயில் தண்ட வாளத்தின் கீழே உள்ள சிறுபாலங்களை ரயில்வேதுறை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள கொளவாய் ஏரியை நோக்கி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. செங்கல்பட்டு-மதுராந்தகம் ரயில்வே இருப்புப் பாதை பகுதியில் உள்ள 7 சிறு பாலங்கள் வழியாக செல்லவேண்டிய மழைநீர், அவை தூர்ந்து போனதால் நகர குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால், சிறு பாலங்களை அகலப்படுத்துமாறு ரயில்வே துறைக்கு, பொதுமக்கள் மற்றும் நகராட்சி தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் அன்புசெல்வன் கூறியதாவது: நக ரத்தின் ஒருபகுதியில் கொளவாய் ஏரியும் மற்ற பகுதியில் மலைகளும் அமைந்துள்ளன. இதனால், நகரப்பகுதிக்கு வரும் மழைநீர் அனைத்தும் கொளவாய் ஏரிக்கு மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், கொளவாய் ஏரியையொட்டி ரயில்வே இருப்புப் பாதை உள்ளது. அத னால், தண்டவாளத்தின் கீழே சிறுபாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், செங்கல்பட்டு-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை பணிகளால் இவை தூர்ந்துள்ளன. இதனால், மழைநீர் ரயில்வே தண்டவாளத்தை கடப்பதில் சிரமம் ஏற்பட்டு சாலை மற்றும் குடியிருப்புகளை சூழ்ந்தது. எனவே, குறுகிய அளவில் உள்ள சிறுபாலங் களை அகலப்படுத்தி ரயில்வே துறையினர் தூர்வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே இருப்புப் பாதை பொறியாளர்துறை வட் டாரங்கள் தெரிவித்ததாவது: சிறு பாலங்களை அகலப்படுத்த நகராட்சி நிர்வாகம் முறையான அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிகளுக்கான நிதியை, ரயில்வே துறைக்கு டெபாசிட் செய்ய வேண்டும். நகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக பணிகளை மேற்கொள்ள முடியாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.