

சோதனைகள் எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான் என அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை நேற்று முன்தினம் சசிகலா சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று 2-வது நாளாக கூவத்தூர் சென்றார். முன்னதாக போயஸ் தோட்டத்தில் இருந்து புறப்படும்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர். இறந்தபோது இதே போன்ற பிரச்சினை ஏற்பட்டது. ஜெயலலிதா அந்த கஷ்ட நஷ்டங்களில் இருந்து வென்று, இந்தக் கட்சி யையும், ஆட்சியையும் பெரிய அளவில் கொண்டு வந்தார். ஜெயலலிதா கட்சியை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த நிகழ்வு களையும் அவருடன் இருந்து பார்த்துள்ளேன். அதனால் இந்த சலசலப்பு எங்களுக்கு புதி தல்ல. ஆரம்ப காலத்தில் இருந்தே தலைவருக் குப் பின்னால் இந்தக் கட்சியை உடைக்க வேண்டும்; இது பெரிய கட்சி, பெரிய இயக்க மாக இருக்கிறது; இதை இரண்டாக பிரிக்க வேண்டும் என நினைத்து இப்போது வெளியே சென்றிருக்கும் புல்லுருவிகள் இதேபோல அன்றும் செய்தார்கள்.
அதிலிருந்து இந்த இயக்கத்தை ஜெயலலிதா மீட்டு மாபெரும் இயக்கமாக கொண்டு வந்து ஆட்சியையும் அமைத்தார். இன்று நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது நீங்கள் எல்லாம் பத்திரிகைகளை சேர்ந்தவர்கள்; உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டும் என்ப தில்லை. உங்களுக்கே எல்லாம் புரியும். இந்தச் சூழ்ச்சியில் யார், யார் பின்னணியில் இருக்கி றார்கள் என்பது இன்று நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரியும்.
வாட்ஸ்-அப் பொய்த் தகவல்
இன்னொரு விஷயத்தையும் உங்களுக்கு கூற வேண்டும் என நினைக்கிறேன். நான் கடிதம் எழுதியதாக சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது. நான் ஏதோ உயிரை விட்டு விடுவேன் என்று கவர்னருக்கு எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி உள்ளது. இதை எனது நண்பர் ஒருவர் என்னிடம்காட்டி இது சமூக வலைத்தளங்களில் வந்திருப்பதாகக் கூறினார். ஒரு பெண் அரசியலில் இருப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதை ஜெயலலிதா காலத்திலேயே பார்த்திருக்கிறேன். அதில் இருந்து அவர் மீண்டு வந்தார்.
என்னைப் பொறுத்தவரை பொதுச் செயலாள ராக அதிமுகவுக்கு வந்திருக்கிறேன். இந்த சோதனைகள் எங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. இதில் நாங்கள் வெற்றி பெறுவோம். ஜனநாயகத்தை நாங்கள் நம்புகிறோம். எங்களி டம் உள்ள அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர் களும் என்னிடம் அன்போடு பழகுகின்றனர். ஆளுநர் காலதாமதம் செய்வதற்கு என்ன கார ணம் என்பது உங்களுக்கே தெரியும். அதே போல், எம்.பி.க்கள் போவதற்கும் யார் காரணம் என்பதும் உங்களுக்கு போகப் போகத் தெரியும்.
சுப்பிரமணியன் சுவாமி
ஆளுநர் காலதாமதம் செய்வதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்ததாக கூறுகிறீர் கள். இதுகுறித்து கலந்து ஆலோசிப்போம். தமிழகத்தில் இந்த ஆட்சிக் காலத்தில் மீதியுள்ள நான்கரை ஆண்டுகள் அதிமுக நிச்சயம் ஆட்சி செய்யும். ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் குற்றச்சாட்டுகளுக்கு தக்க நேரத்தில் பதில் அளிப்போம்.
இவ்வாறு சசிகலா கூறினார்.