Published : 22 Feb 2017 08:14 AM
Last Updated : 22 Feb 2017 08:14 AM

அவர்கள் வரப் போகிறார்கள்... என்ன செய்யலாம் நாம்?

கடந்த பல மாதங்களாகவே மக்கள் நிம்மதியாக இல்லை. காவிரியில் தண்ணீருக்கு பதில் கழிவுகளை விடுகிறார்கள். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என சுற்றிச் சுற்றி அணைகளைக் கட்டு கிறார்கள். மழை இல்லை. நீர்நிலை களில் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர் வற்றிப்போய்விட்டது. பயிர்கள் கருகிவிட்டன. விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். மீத்தேன் போய் ஹைட்ரோ கார்பன் மிரட்டுகிறது. ‘நீட்’ பிரச்சினை தீரவில்லை. முதல்வர் மரணமடைந்துவிட்டார். ஓர் வருடத்தில் மூன்று முதல்வர்கள் மாறியிருக்கிறார்கள். அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துவிட்டது. மக்களின் மனநிலைக்கு மாறாக வீற்றிருக்கிறது அரசாங்கம்.

நீங்கள் தேர்ந்தெடுத்த சட்டமன்ற பிரதிநிதிகள் உங்கள் வார்த்தையைக் கேட்க தயாராக இல்லை. ஒட்டுமொத்த கோபமும் அரசின் பக்கம் திரும்பியிருக்கிறது. மெரினா சரித்திர சம்பவம் மட்டுமல்ல; விசித்திர சம்பவமும்கூட. சரித்திரங்களும் விசித்திரங்களும் குறுகிய காலத்தில் மீண்டும் மீண்டும் வராது. மெரினாவில் கூடவும் விடமாட்டார்கள். சரி இப்போது என்ன செய்யலாம்?

தோ உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துவிட்டது நீதிமன்றம். வரும் மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கண்டிப்புடன் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. உண்மையில் மே 14-ம் தேதி என்பதே மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்திய அரசியல் சாசன சட்டத்தின்படி 2016, அக்டோபர் 24-ம் தேதிக்குள்ளேயே தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். இயல்பாக காலாவதியான ஜனநாயக அமைப்பான உள்ளாட்சி என்னும் மூன்றாம் அரசாங்கத்தை அப்படிதான் தேர்வு செய்திருக்க வேண்டும். சரி, அசாதாரண சூழல் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி எனில் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். அக்டோபர் 24-ம் தேதியில் இருந்து கணக்கிட்டால் வரும் ஏப்ரல் 24-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும். மே 14-ம் தேதி என்பதும்கூட அரசியல் சட்ட சாசனத்தை மீறியதாகும். மாநில அரசு என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம். சரி, மக்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அதற்கு முன்பாக ஒரு நிகழ்கால அரசியல் உண்மை கதையைப் பார்ப்போமா?

கொங்கு மண்டலத்தில் பல்லடம் அருகே இருக்கும் ஒரு கிராமப் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் அவர். முன்மாதிரி தலைவரும்கூட. கிராம சபை கூட்டம் என்றில்லாமல் அடிக்கடி கூட்டங்கள் நடத்துவார். துப்புரவு பணியாளர்களுக்கு ஒருநாள் கூட்டம் நடத்துவார். சுய உதவிக் குழுப் பெண்களுக்கு ஒருநாள் கூட்டம் நடத்துவார். இளைஞர்களைக் கூட்டி ஒருநாள் கூட்டம் நடத்துவார். மக்களுக்கான உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? இயற்கை வளங்களைப் பாதுகாப்பது எப்படி? அரசு திட்டங்களைப் பெறுவது எப்படி என்றெல்லாம் பாடம் எடுப்பார். பஞ்சாயத்தில் யார் வேண்டுமானாலும், எந்த நேரம் வேண்டுமானாலும் எளிதில் அவரை அணுகலாம். மக்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, தோளில் கைபோட்டு பேசுவார். சாதி, மதம் கடந்து மக்கள் இதயத்தில் குடியிருந்தார்.

அதே செல்வாக்கில் கடந்த முறை அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்டு சட்டசபை உறுப்பினர் ஆனார். ஆனால், சுமார் 20 ஆண்டுகளாக மக்கள் மனதில் இருந்தவரை ஒரே நாளில் வீசிய அரசியல் சூறாவளி தூக்கிவீசிவிட்டது. கட்சிக்கு கட்டுப்பட்டு விடுதியில் தங்கினார். தொகுதிக்கு செல்லாமல், மக்கள் பேச்சை கேட்காமல் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்துகொண்டார். மக்கள் வெறுப்புக்குள்ளாகிவிட்டார். கடந்த வாரம் வரை அவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடிய மக்கள் இன்று வெறுப்பில் தகிக்கிறார்கள். ‘அவரா இப்படி?’ என்று நம்ப முடியாமல் கண்ணீர் வடிக் கிறார்கள்.

ஒரே நாளில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அவர் எப்போது ஊருக்குள் வருவார் என்று கோபத்துடன் மக்கள் காத்தி ருக்கிறார்கள். சொந்த பந்தங்களும் குடும்பத்தினருமேகூட கேள்விகளுடன் காத்திருக் கிறார்கள். துரோகம் இழைக்கப்பட்டதாகக் கொதிக்கிறது அந்தக் கிராமம். அவரால் மக்கள் முன்பாக தலையைக் காட்ட இயலவில்லை. கேள்விக்குறியாகியிருக்கிறது அவரது அரசியல் எதிர் காலம். ஒரு நாட்டின் மூன்றாம் அரசாங் கமான உள்ளாட்சிக்கும் இரண்டாவது அரசாங்கமான மாநில ஆட்சிக்கும் இருக்கும் வித்தியாசம் இதுதான்!

இதோ உள்ளாட்சித் தேர்தலை அறிவித்துவிட்டார்கள். இப்போது உங்கள் முறை. அதிகாரச் சக்கரம் சுழன்று உங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. வாளின் கைப்பிடி உங்கள் வசம் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x