

மனித இனத்துக்கு அச்சுறுத்தலான மதமாற்றங்களைத் தடுக்க வேண்டுமென்று, இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
கனடா நாட்டு நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதில் ஈடுபட்டு கொலையுண்டவர் அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் சமீபத்தில் மதம் மாறியவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்து மதம், கடந்த பத்தாயிரம் ஆண்டு உலக சரித்திரத்தில் எவரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதில்லை. எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு செய்ததில்லை. ஆனால், இந்து சமயத்தை, நூல்களை அழிக்க முற்பட்டவர்கள்தான் முகலாயர்களும், மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகளின் ஆக்கிரமிப்பாளர்களும் என்பதை நினைவுபடுத்துகிறோம்.
எனவே, தனது மதமே உலகில் இருக்க வேண்டும் எனும் கருத்தை போதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதவாத சக்திகளுக்கு வரும் நிதியை தடுக்க வேண்டும். மதவாத சக்திகளின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். மனித இனத்துக்கு அச்சுறுத்தலான மதமாற்றத்தை தடுக்க வேண்டும். இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.