தேர்தல் முடிந்ததும் ஏற்காட்டில் 4 மணி நேர மின்வெட்டு: ஸ்டாலின்

தேர்தல் முடிந்ததும் ஏற்காட்டில் 4 மணி நேர மின்வெட்டு: ஸ்டாலின்
Updated on
1 min read

ஏற்காடு தொகுதியில் தேர்தல் முடிந்ததும், நான்கு மணி நேரம் மின் வெட்டு அமலாக உள்ளது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார். ஏற்காடு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து, சென்னை திரும்பிய ஸ்டாலின் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தார்.

அப்போது, "ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏற்காடு தொகுதியில் தேர்தல் முடிந்ததும், நான்கு மணி நேரம் மின் வெட்டு அமலாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக உள்ளது.

ஏற்காடு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளார். தமிழக சட்டசபையில் 110 வது விதியின் கீழ், அவர் அறிவித்த திட்டங்களையே இன்னும் நிறைவேற்றவில்லை. இந்த வாக்குறுதிகளும் அப்படித்தான். மக்களை ஏமாற்றுவோரை, ஏற்காடு மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர்" என்றார் ஸ்டாலின்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in