Published : 13 Feb 2017 08:21 AM
Last Updated : 13 Feb 2017 08:21 AM

கட்சி தேர்தலில் சசிகலா போட்டியிட்டால் 1.5 கோடி தொண்டர்களின் ஆதரவு கிடைக்காது: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

அதிமுகவில் பொதுச் செயலர் பதவிக்கு சசிகலா போட்டியிட்டால் 1 கோடியே 50 லட்சம் தொண்டர் களின் ஆதரவும் அவருக்கு கிடைக் காது என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில், அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது ஏற்பட் டுள்ள அசாதாரண சூழ்நிலை போல பிற மாநிலங்களிலும் நடந்துள்ளது. அப்போதும் இதுபோல முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த சூழலில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் சரியான முடிவை எடுப்பார்.

இந்த சூழலில், தமிழக அரசு நிர்வாகம் சரியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தலைமைச் செயலர், காவல்துறை தலைவர் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து ஆலோசனை வழங்கி வருகிறேன்.

ஜெயலலிதா மருத்துவமனை யில் இருந்தபோது, சசிகலா எந்த பேட்டியும் தரவில்லை. அப்போது அசாதாரண சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். தற்போது தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ள எழுச்சியை உலக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். துபாய், சிங்கப்பூரில் இருந்து மக்கள் வந்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர்.

அதிமுக உட்கட்சி தேர்தலில் சசிகலா போட்டியிட மாட்டார். ஒரு வேளை தேர்தல் நடத்துவதாக இருந்தால், தேர்தல் ஆணையத் திடம் பணியை ஒப்படைக்க வேண் டும். அவ்வாறு தேர்தல் நடந்தால் எந்த காலத்திலும் சசிகலா அதிமுக பொதுச் செயலராக வர முடியாது. 1.5 கோடி தொண்டர்களின் ஆதர வும் அவருக்கு கிடைக்காத நிலைதான் ஏற்படும்.

அதிமுக எம்எல்ஏக்களை வெளி யில் விடாமல் வைத்திருப்பதால், அவர்கள் வெறுப்படைந்து உள்ளனர். சட்ட சபை கூடும்போது எனது பெரும்பான்மையை நிரூபிப்பேன். விரைவில் நல்ல முடிவு உறுதியாக வரும்.

இதுவரை அதிமுகவினர் யாரும் பத்திரிகையாளர்களை தாக்கியதாக வரலாறு இல்லை. அங்குள்ள எம்எல்ஏக்களுக்கு அரணாக குண்டர்கள் இருப்பது தெளிவாகிறது. பத்திரிகையாளர் கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x