காவலர்கள் குறைகளை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவிப்பு

காவலர்கள் குறைகளை மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவிப்பு
Updated on
1 min read

காவல்துறையினர் தங்கள் குறை களை மின்னஞ்சல் (இமெயில்) மூலம் தெரிவிக்கலாம் என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கை:

தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர் களும் துறைசார்ந்த பொதுவான நலத்திட்டங்கள், குறைகள், கோரிக்கைகள் (பணிமாறுதல் மற்றும் தண்டனைப் பட்டியல் தவிர்த்து) ஏதேனும் இருப்பின் அதுதொடர்பாக tnpolicewelfare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்.

காவல் துறையின் அனைத்து பிரிவு அதிகாரிகளும் இந்த சுற் றறிக்கையை அனைத்து காவல் நிலையங்கள், உட்கோட்ட அலு வலகங்கள் வாயிலாக காவலர் களின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அறிவிப்பு பலகையிலும் ஒட்ட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in