

கரூரில் 14 பேருந்துகளின் கண் ணாடிகள் உடைக்கப்பட்டது தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர் உள்பட 26 பேரும், கடைகளை அடைக்கச் சொல்லி மிரட்டியதாக 46 பேரும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சட்டப்பேரவையில் எதிர்க் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தாக்கப்பட் டதை கண்டித்து, கரூர் பேருந்து நிலையத்தில் அரசு, தனியார் பேருந்துகள், தனியார் வாகனங் கள் கல்வீசி தாக்கப்பட்டன.
பேருந்து நிலையத்தில் நின்ற 14 அரசுப் பேருந்துகளின் கண் ணாடிகள் உடைக்கப்பட்டன. இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்துக்கழக கிளை மேலாளர் ராஜேந்திரன், கரூர் நகர போலீ ஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதையடுத்து, கரூர் மாவட்ட திமுக செயலாளர் நன்னி யூர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேரும் கரூர் மத்திய நகர திமுக துணைச் செயலாளர் வெங்கட் ராமன்(58) உள்ளிட்ட 46 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 72 பேரும் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.