

பண்ணைப் பிராணிகள், செல்லப் பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை குறித்த 8-வது கருத்தரங்கம் சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் தலைமை தாங்கினார்.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆய்வு மலரை வெளியிட்டு பேசினார்.
கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசும்போது, ‘‘கால்நடை பராமரிப்பு பிரிவில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தமிழக அரசு ரூ.4,600 கோடி அளித்துள்ளது. கால்நடைகளின் நோயை கண்டறியும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.