Published : 16 Sep 2016 09:03 AM
Last Updated : 16 Sep 2016 09:03 AM

கர்நாடக அரசைக் கண்டித்து முழு அடைப்பு: தமிழனின் உணர்வை உலகுக்கு சொல்லும் போராட்டம் - இயக்குநர் தங்கர் பச்சான் உருக்கம்

கர்நாடக அரசைக் கண்டித்து இன்று நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டம், தமிழனின் உணர்வையும், இழைக்கப்படும் அநீதியையும் உலகுக்கு சொல்லும் போராட்டம் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீர்நிலைகளை, இந்த மண்ணை, காற்றை மாசுப்படுத்தி மக்களையும், உயிரினங்களையும் அழித்துக்கொண்டிருக்கும் ஆலை களையும், தொழிற்சாலை களையும் நிரந்தரமாக மூடி வெளியேற்றுவதை விட்டுவிட்டு வெறும் துடைப்பத்தை வைத்துக் கொண்டு இந்தியாவை தூய்மை நாடாக்க முயலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழர்களின் உரிமை பற்றியும், உணர்வு பற்றி யும்,வாழ்வு பற்றியும் என்ன கவலை இருக்கிறது?

என்றைக்கும் மாறாத சிக்க லாக மாறிவிட்ட காவிரிக்காக இதுவரை எத்தனை எத்தனைத் தீர்ப்புகள். எத்தனை எத்தனைப் போராட்டங்கள். இவையெல்லாம் தெரிந்தும் நடக்கவிருக்கும் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வையும், நமக்கு இழைக் கப்படுகிற அநீதியையும் இந்த உலகுக்குச்சொல்லும் போராட்டம்.

மூன்றுவேளையும் தவறாமல், பசியில்லாமல் போனாலும் கடிகாரம் பார்த்து சாப்பிடுகிற நாம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானும் ஒரு தமிழனாக, ஒரு உழவனாக போராட்டத்தில் பங்கேற்று என் கடமையை ஆற்றுகிறேன். மனது வலிக்கிறது! இதைக் கண்டாவது பொதுமக்களாகவே இருக்கப் பழகிவிட்டத் தமிழர்களை வீதிக்கு இறங்கவைக்க முயற்சிக்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x