Published : 23 Jun 2017 09:22 AM
Last Updated : 23 Jun 2017 09:22 AM

காட்டுமன்னார்கோவில் அருகே குளத்தை தூர்வாரும்போது ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம் காட்டுமன் னார்கோவில் அருகே உள்ள திருமூலஸ்தானம் கைலாச நாதர் சிவன் கோயிலின் குளத்தை தூர்வாரும்போது, நடராஜர் சிலை உள்ளிட்ட 4 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருமூலஸ் தானம் கிராமத்தில் கைலாச நாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் வண்டல் மண் எடுத்து தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. நேற்று, பொக்லைன் இயந்திரம் மூலம் வண்டல் மண் வெட்டி எடுக்கும் போது கணீரென சத்தம் கேட்டுள்ளது.

அந்த இடத்தை ஆராய்ந்த போது, சேதமடைந்த நிலையில் 200 கிலோ எடை 4 அடி உயரம் மற்றும் அடி பீடத்துடன் கூடிய நடராஜர் சிலை, 100 கிலோ எடை 3 அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை, தலா 100 கிலோ எடை மற்றும் 3 அடி உயரமுள்ள 2 அம்மன் சிலைகள் என 4 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன.

இதுகுறித்த தகவல் பரவிய தும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொது மக்கள் வந்து சிலைகளை வணங்கிச் சென்றனர். 4 ஐம்பொன் சிலைகளும் காட்டு மன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்து சிலைகள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தொல்லியல் துறை வல்லு நர்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x