

ஆந்திர கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. நேற்றும் மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதி யில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நிலைகொண்டுள் ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி யில் மழை நீடிக்கும். சென்னை யைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் 17.3, நுங்கம்பாக்கத்தில் 10.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.