

நூறு ஆண்டுகள் தூர்வாரப்படாத பழவேற்காடு ஏரியின் முகத்து வாரத்தை, மீனவர்களே தங்கள் சொந்த செலவில் தூர் வாரும் பணியை புதன்கிழமை தொடங்கினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன் னேரியை அடுத்த பழவேற்காடு ஏரி நாட்டிலேயே ஒடிசா மாநிலத் தில் உள்ள சில்கா ஏரிக்கு அடுத் தபடியாக இரண்டாவது மிகப் பெரிய ஏரியாகும். இங்கு 100 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிராமப்பட்டினம் என்கிற பெய ரில் இயற்கை துறைமுகம் இயங்கி வந்தது.
இந்தத் துறைமுகம் காலப் போக்கில் குறுகலாகி போனதால் முன்பு முழுவேகத்தில் இயங்கி வந்த பாய்மர கப்பல் சேவையும் நிறுத்தப்பட்டது. பின்னர் வெறும் மீன்பிடிக்க மட்டுமே இந்த ஏரி பயன்பட்டு வந்தது. தற்போது மீன் பிடிப்பதற்கும் வழியில்லாத வகையில் முகத்துவாரமாக மாறி விட்டது. இந்த முகத்துவாரத்துக்கு உட்பட்ட பழவேற்காடு ஏரியில் தோணிரேவு, நடுவூர், மாதாக் குப்பம், கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், குலத்துமேடு, ஜமிலாபாத், எஸ்பி குப்பம், லைட்ஹவுஸ் குப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் இறால் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
அரங்கம் குப்பம், கூனம் குப்பம், சாட்டன் குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்த முகத்துவாரத்தைப் பயன் படுத்தி கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் வறட்சி நிலவும் கோடைக் காலத்தில் இம்முகத்துவாரத்தில் மணல் அடைவதும், பின்னர் அதை அனைத்துக் கிராமங்களை சேர்ந்த மீனவர்களும் ஒன்று சேர்ந்து அந்த அடைப்பை நீக்குவதும் வாடிக்கை யாகும்.
இந்நிலையில் இந்த வருடம் பருவ மழை பொய்த்ததால் ஏரியில் நீர்வரத்து குறைந்தது. இதனால், முகத்துவாரத்தில் மணல் அடையும் நிலை ஏற்பட்டது. தமிழக அரசிடம் இப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இந்த முகத்துவாரம் விசைப் படகுகள் சென்று வரும் அளவுக்கு இருந்தால்தான் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட் டுள்ளதால், அவர்கள் சொந்தப் பணத்தை செலவழித்து ஏரியின் முகத்துவாரத்தை தூர் வாரும் பணியை தொடங்கியுள்ளனர்.
32 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து இப் பணியை மேற்கொண்டுள் ளனர். அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத் துள்ளனர்.