வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு ஜூன் 19-24ம் தேதி பொதுக் கலந்தாய்வு

வேளாண்மை பல்கலைக்கழக சிறப்பு கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு ஜூன் 19-24ம் தேதி பொதுக் கலந்தாய்வு
Updated on
1 min read

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் நேற்று நடந்த சிறப்புக் கலந்தாய்வில் 32 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் உள்ள 14 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 21 தனியார் கல்லூரிகள் மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத் தில் 2017-18-ம் ஆண்டு இளங் கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சிறப்புக் கலந்தாய்வை, பல் கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி, டீன் மற்றும் மாண வர் சேர்க்கை பிரிவுத் தலைவர் எஸ்.மகிமைராஜா ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

18 மாற்றுத்திறனாளிகள்

விளையாட்டுப் பிரிவில் 5 பேர், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளில் 8 பேர், மாற்றுத் திறனாளிகள் 18 பேர், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசு களில் ஒருவர் என 32 பேர், பி.எஸ்சி. வேளாண்மை, தோட் டக்கலைத் துறை, பி.டெக். வேளாண்மை பொறியியல் பிரிவு களுக்குத் தேர்வு செய்யப்பட்ட னர். இதற்காக 75 பேர் வர வழைக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.

வேளாண்மைப் பல்கலைக் கழக நிர்வாகத்தினர் கூறும்போது, ‘இம்மாதம் 19 முதல் 24-ம் தேதி வரை பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 தேர்வில் வொகேஷனல் குரூப் படித்த மாணவர்களுக்கு 28-ம் தேதியும், இன்டஸ்ட்ரியல் கோட்டா மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கோட்டா வுக்கு (என்.ஆர்.ஐ.) 30-ம் தேதி யும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஜூலை 24-ம் தேதி கல்லூரி தொடங்கும்.

13 பாடப் பிரிவுகள்

பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலைத் துறை, பட்டு வளர்ப்பு, வனவியல், ஊட்டச் சத்து, உணவு நிர்வாகம் மற்றும் உணவு முறை, வேளாண் சந்தை நிர்வாகம், பி.டெக். வேளாண்மைப் பொறியியல், பயோ டெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேஷன், வேளாண்மை தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தல் பொறியியல், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் உள்ளிட்ட 13 பாடப் பிரிவுகளில் 2820 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in