

தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்தாண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகவேல் உள்ளிட்ட 9 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘‘மேல் நிலைக் கல்வி என்பது பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் சேர்ந்ததே. எனவே கடந்தாண்டு தமிழக பாடத்திட்டத்தின் கீழ் மேல்நிலைக்கல்வி முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. கடந்தாண்டு பிளஸ் 1 படித்து இந் ஆண்டு பிளஸ் 2 முடித்த எங்களுக் கும், கடந்தாண்டைப் போல நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் எம்.சத்யநாராயணன் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங் கிய அமர்வு, “நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடாது’’ என உச்ச நீதிமன்றம் அனைத்து உயர் நீதிமன்றங்களையும் அறி வுறுத்தியுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம் மாணவர்கள் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.
நீட் தேர்வு தொடர்பான எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடாது’’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது