மோடி ஆட்சியில் தலித்கள், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்: ப.சிதம்பரம்

மோடி ஆட்சியில் தலித்கள், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்: ப.சிதம்பரம்
Updated on
1 min read

சென்னை ஆயிரம்விளக்கு பகுதி யில் நேற்று நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் ப.சிதம்பரம் பேசியதாவது:

விடுதலை அடைந்து 70 ஆண்டு களாகியும் இந்தியாவில் இன்னும் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு முழுமையான சுதந்திரம், சமத்து வம், சகோதரத்துவம் கிடைக்க வில்லை. அரசியல் ரீதியான சுதந்திரம் மட்டுமே கிடைத்துள்ளது.

தலித்களின் விடுதலைக்காக பாடுபட்ட அம்பேத்கர் பிறந்து 126 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் கிராமங்களில் பொது கிணறுகள், குளங்களில் தலித் மக்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி யில் தலித்கள், முஸ்லிம்கள், சிறுபான்மையினர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின ரும், தலித்களும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

குஜராத், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் மாட்டுக்காக மனி தர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது. ஆனால், இதனை கண்டிக்கக் கூட பிரதமர் மோடி முன்வரவில்லை. இதுபோன்ற நிலையை நாடு இதுவரை சந்தித்தது இல்லை.

உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோவில் சென்ற காதலர்களை காவலர்களும், காவிகளும் சேர்ந்து அடித்து இழுத்துச் சென்று காவல் நிலைத்தில் வைத்து விசாரித்து துன்புறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். பாஜக ஆட்சியில் காதலர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருப்பவர்க ளும், ஆளும் கட்சியினரும் தலித் கள், சிறுபான்மையினருக்கு அச் சுறுத்தல் விடுக்கின்றனர். இந்த அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in