Last Updated : 23 Sep, 2016 10:18 AM

 

Published : 23 Sep 2016 10:18 AM
Last Updated : 23 Sep 2016 10:18 AM

வாகன ஓட்டிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் விபத்து பயண வழியாக மாறிப்போன உளுந்தூர்பேட்டை சாலை மார்க்கம்: 8 மாதங்களில் 143 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முக்கியச் சாலை கேந்திரமாக திகழும் சென்னை - திருச்சி நான்குவழி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் விபத்துகள் நடக்கின்றன. இந்த மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்துக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் முதல் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் வரையிலான சுமார் 40 கி.மீ. இடைவெளி பகுதியில் விபத்துகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள திருவெண் ணைநல்லூர், திருநாவலூர், உளுந்தூர்பேட்டை, எடைக்கல், எலவனாசூர்கோட்டை மற்றும் வேப்பூர் ஆகிய 6 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை நிகழ்ந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கை 377. இதில் உயிரிழப்பு 143, காயமடைந்தவர்கள் 353. அதிலும் திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எடைக்கல் பகுதியில் மட்டும் 106 விபத்துகள். அவற்றில் 39 பேர் உயிரிழப்பு, 90 பேர் காயமடைந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிக விபத்துகள் நிகழ்வதைத் தொடர்ந்து மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அந்தப் பகுதியை ஆய்வு செய்தார். குறிப் பாக எடைக் கல் காவல் நிலை யம் அருகே விபத்துக்குக் காரண மாகக் கூறப் படும் சேலம் சாலை பிரிவு சந்திப் பில் மாற்றுவழி ஏற் படுத்துவது தொடர்பாக நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தப் பகுதியில் நடைபெறும் விபத்துகளுக்கான காரணம் குறித்து உளுந்தூர்பேட்டை போக் குவரத்துக் காவல் பிரிவினரிடம் கேட்டபோது அவர்கள் கூறிய தாவது:

பெரும்பாலான விபத்துகள் அதிகாலையில்தான் நடைபெறுகின் றன. அப்போது ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனத்தை இயக்கும் போது விபத்து நேரிடுகிறது. திருநெல்வேலி, மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்கள் இந்தப் பகுதியை கடக்கும்போது பயணக் களைப்பு ஏற்பட்டு கண் அயர்ந்துவிடுகின்றனர். மேலும், இப்பகுதியில் சமூக காடுகள் திட்டத் தின் வனப் பகுதியும், விவசாய நிலங்களும் அதிக அளவில் உள்ளன. வனப் பகுதியிலிருந்து வரும் விவசாயிகள் மற்றும் சிறு விலங்குகள் சாலையில் குறுக் கிடும்போது விபத்துக்குள்ளாக நேரிடுகிறது என்கின்றனர்.

எடைக்கல் பகுதியைச் சேர்ந்த சூழலியல் கருத்தாளர் சங்கர் கூறும்போது, ‘‘சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எடைக் கல் பகுதியிலிருந்து சேலம் புறவழிச் சாலைக்கு வலது புறமாகச் சென்று, அதன்பின் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்றும், சென்னைக்குச் செல்வோர் இடதுபுற பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பும்தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளது.

பொதுவாக ஒரு சாலையிலி ருந்து மற்றொரு சாலைக்குத் திரும்ப வேண்டுமெனில் இடது புறத்தைத்தான் தேர்வு செய்வது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இங்கு சாலைப் பிரிவு அமைந் துள்ளது. இந்தச் சாலைப் பிரிவை ஒழுங் குபடுத்தினால்தான் விபத்தை குறைக்க முடியும்'' என்கிறார்.

‘சாலை பாதுகாப்பும் - பயன்ப டுத்துவோரும்' என்ற அமைப்பின் நிறுவனர் சங்கர்ராஜு விபத்து குறித்து கூறியதாவது: ‘‘பெருகிவரும் சாலை விபத்து களுக்கு ஏற்ப சாலை பாது காப்புக்கான விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். முதலில் வாகன உரிமையாளர்க ளுக்குச் சாலை விதிகள் குறித்து முறையான பயிற்சி அளிப்பது அவசியம். தென் மாவட்டங்களி லிருந்து காரை ஓட்டி வருபவர் விடிவதற்குள் சென்னை சென்ற டைய வேண்டிய கட்டா யத்தில் உள்ளனர். நெடுஞ்சாலைத்துறை இந்தப் பகுதியில் ஓட்டுநர்களுக் கான கட்டாய ஓய்வறை ஏற்ப டுத்த வேண்டும். வாகனத் தணிக் கைகளை இந்த இடைப்பட்ட பகுதியில் மேற்கொள்ளலாம். ஆங்காங்கே எச்சரிக்கை பதாகை களையும் கூடுதலாக வைக்க வேண்டும்'' என்கிறார்.

விபத்துகளைத் தடுப்பதற்கு காவல்துறையும், போக்குவரத்து றையும் எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளிடம் போதிய விழிப்புணர்வும், கவன மாக ஓட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வும் ஏற்பட்டால் மட்டுமே சாலை விபத்துகளைத் தவிர்க்க முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x